500 இலங்கை தொழிலாளர்களுக்கு இஸ்ரேலில் வேலை வாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக கைத்தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
வேலை வாய்ப்புக்கள் குறித்து பத்திரிகைகளில் விளம்பரமொன்று வெளியிடப்பட்டுள்ளதுடன், தகுதியான தொழிலாளர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, கொரிய அரசாங்கம் இலங்கைக்கு 4,500 வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. தற்போதைய கோவிட் தொற்றுநோய் காரணமாக, கொரிய அரசாங்கம் வெளிநாட்டவர்கள் வருகைக்கு முற்றாக தடை விதித்துள்ளதால், தற்போது அந்நாட்டில் வெளிநாட்டவர்களை வரவழைப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடை நீக்கப்பட்டதும் இலங்கை தொழிலாளர்களை கொரியாவுக்கு வேலை வாய்ப்புகளுக்காக அனுப்ப முடியும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.