நாட்டை முடக்குமாறு கடிதம் எழுத்திய அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் தலைவர்களின் தலைவர்கள் 10 பேரில், அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மூவருக்கும், அமைச்சரவையில் கடுமையான அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவருமே இவ்வாறு வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த 17 ஆம் திகதியன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, நாட்டை முடக்காமல் இருக்கவே தீர்மானிக்கப்பட்டது. அதற்கு ஆமோதித்த அமைச்சர்கள், வெளியில் சென்று கடிதம் எழுத்தியமைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இம்முறை அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. அதன்போதே கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ கடிதம் எழுதுவதில் பிரச்சினை இல்லை. அதனை அமைச்சரவைக்குள் கலந்துரையாடி இருக்கலாம். ஆனால், ஊடகங்களுக்கு அனுப்பியது ஏன்? என்றும் அமைச்சரவையில் வினவப்பட்டது.
கூட்டுப்பொறுப்புடன் அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு புறம்பாக செயற்படுவது அரசாங்கத்துக்கு பிரச்சினையாகும் என்றும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.