விளக்கமறியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியரை திட்டியமை, மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் உதவி சிறை அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய மகஸின் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சந்தேக நபரான ரிஷாத் பதியுதீன், கடந்த 15ஆம் திகதி தன்னைத் திட்டியதாகவும் மரண அச்சுறுத்தல் விடுத்தாகவும் வைத்தியரான பிரியங்க இந்துனில் புபுலேவெல வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு வழங்கிய வைத்தியர், பின்னர் பொரளை பொலிஸில் கடந்த 21ஆம் திகதி முறைப்பாடு அளித்திருந்தார்.