கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்த தேர்தல்கள் ஆணையாளர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்னாயக்க கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளானதன் பிறகு அவர் கண்டியிலுள்ள தனது வீட்டிவ் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு மூச்சுத் திணரல் ஏற்பட்டதையடுத்து அவர் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்கு ஒட்சிசன் வழப்பட்டதையடுத்து தற்போது அவரின் உடல்நிலை தேறி வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.