Our Feeds


Wednesday, August 18, 2021

www.shortnews.lk

கையில் ஸ்மாட் அலைபேசி இருக்கும் அனைவரும் ஊடகவியலாளர்களாகி விட முடியாது - சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பின் பொதுச் செயலாளர் லசந்த டி சில்வா

 



எப்.முபாரக் 


கொவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில்  இக்காலங்களில் ஊடகவியலாளர்களின் பங்கு அளப்பரியது என சுதந்திர ஊடகாவியலாளர் அமைப்பின் பொதுச் செயலாளர் லசந்த டி சில்வா தெரிவிப்பு.


கொவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில்  இக்காலங்களில் ஊடகவியலாளர்களின் பங்கு அளப்பரியது என சுதந்திர ஊடகாவியலாளர் அமைப்பின் பொதுச் செயலாளர் லசந்த டி சில்வா தெரிவித்தார்.


கந்தளாயில் கங்க தலாவ ஊடகவியலாளர் சங்கத்திற்கும், சுதந்திர ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் லசந்த டி சில்வாவவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கந்தளாயில் நேற்று (17) நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்: அரசாங்கம் ஊடகவியலாளர்களின் பக்கமும் பார்க்க வேண்டும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையிலும் அனைத்தினையும் சேகரித்து செய்திகளை உடனுக்குடன் அனுப்பி வருகின்றார்கள் அவர்களுக்கு உதவ வேண்டும்.


உள்ளூர் ஊடகவியலாளார்களின் செயற்பாடுகளும் வேகமும் அதிகரித்துச் செல்கின்றது, அனைத்து விடயங்களிலும் சமூக ஊடகங்களின் பங்கினை காணக்கூடியதாகவுள்ளது. ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை ஒழுங்கான முறையில் அறியக் கிடைக்கா விட்டாலும் சமூக ஊடகங்கள் அதனை கொஞ்சமாவது வெளிக்காட்டுகின்றது.


கையில் ஸ்மாட் அலைபேசி இருக்கும் அனைவரும் ஊடகவியலாளர்களாகி விட முடியாது, ஊடக தர்மம், பத்திரிகை ஒழுக்க கோவை மற்றும் செய்திகளின் நம்பிக்கை தன்மை பேணப்படல் வேண்டும். தற்போது நாட்டில் சமூக ஊடகங்களின் செயள்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது, ஒரு தனி மனிதனுக்கு இரண்டுக்கு மேற்பட்ட முகப்புத்தக கணக்குகள் காணப்படுகின்றன.


தற்போதைய கால கட்டங்களின் ஊடகவியலாளர்களின் பொருளாதாரம் சரிந்து வருகின்றது. திட்டமிட்டபடி ஊடக நிறுவனங்கள் ஊதியங்களை வழங்க தவறி விடுகின்றார்கள், அச்சு மற்றும் இணையத்தள ஊடகவியலாளர்கள் ஊதியமற்ற ஊடக உதவியாளர்களாக செயற்படுகின்றார்கள், எமது சுதந்திர ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் பல்வேறு கோரிக்கைகளையும், அழுத்தங்களையும் பிரயோகித்து வருகின்றோம். 


ஊடகவியலாளர்களின் கொடுப்பனவு விடயங்களில் ஊடகத்துறை புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள டலஸ் அழகப்பெரும நடவடிக்கைகள் எடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.


இதன் போது கங்கத்தலாவ ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறைபாடுகள் தொடர்பாகவும் சுதந்திர ஊடகவியலாளர்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் கேட்டறிந்து கொண்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »