Our Feeds


Monday, August 2, 2021

www.shortnews.lk

பல நாட்கள் தேடப்பட்ட பெண்ணின் சடலம் டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப் பகுதியில் மீட்பு!

 



(க.கிஷாந்தன்)


திம்புளை பத்தனை பொலிஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் நேற்று (01) மாலை மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திம்பளை பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் பத்தனை நகரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான வீ.மலர்விழி வயது (53) என உறவினர்கள் பொலிஸாருக்கு அடையாளம் காட்டியுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் (26) ஆம் திகதி வீட்டிலிருந்து காணாமற்போனமை தொடர்பில் திம்புளை பத்தனை பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைபாடு செய்துள்ளனர்.

இதனடிப்படையில் வீட்டிலிருந்து காணாமற்போன இப்பெண் நீலம் மற்றும் வெள்ளை நிற கோடுகள் இட்ட கவுன் ஒன்றே அணிந்திருந்ததாக பொலில் முறைப்பாட்டில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் டெவோன் நீர்வீழ்ச்சி பகுதியில் தேடுதல் முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் குடை, பாதணிகள், மற்றும் கைப்பை ஒன்று நீர்வீழ்ச்சி உச்சப்பகுதியில் இருந்ததை கண்டறிந்துள்ளனர்.

அத்துடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் பெண்ணின் தகவல் ஏதும் கிடைத்திராத நிலையில் (01) மாலை நீர்வீழ்ச்சியில் சுமார் 200 அடி பள்ளத்தில் நீரில் மிதந்த நிலையில் இப்பெண்ணின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மரணம் தொடர்பான பிரேத பரிசோதனைக்காக சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதே நீர்வீழ்ச்சியை பார்வையிட கடந்த மாதம் 18 ஆம் திகதி சென்ற 4 யுவதிகளில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லென்தோமஸ் தோட்ட யுவதியான மணி பவித்ரா வயது (19) தவறி வீழ்ந்து காணாமற் போயிருந்தார்.


அவரை தேடும் பணியில் படையினர் ஈடுப்பட்டபோதிலும் மீட்கப்படவில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »