Our Feeds


Thursday, August 26, 2021

www.shortnews.lk

கொரோனா பேரழிவினால் உதவியற்றுள்ள மக்களை அரசாங்கம் பழிவாங்கத் தொடங்கியுள்ளது. - சஜித் கடும் சாடல்

 



தனிமைப்படுத்தல் நிவாரணப் பொதிகளையும் அரசாங்கம் கையகப்படுத்துவிட்டது.


தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த ரூ.10,000 பெறுமதியான நிவாரணப் பொதியை மட்டுப்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


◼️மக்களின் கழுத்தை நெரித்தேனும் தனது இலக்குகளை அடையவே தயங்காத அரசாங்கம், கொரோனா பேரழிவின் காரணமாக மிகவும் உதவியற்றுள்ள மக்களை பழிவாங்கத் தொடங்கியுள்ளது.


◼️கொடூரமான கொரோனா பரவலிலிருந்து உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே நாட்டை குறுகிய காலத்திற்கு மூடுவதற்கு நாங்கள் அரசாங்கத்தை கட்டாயப்படுத்தினோமே அன்றி, மக்களின் வாழ்க்கையை ஒடுக்கவதற்கு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட உரிமம் அல்ல.


◼️ எங்களது தொடர்ச்சியான கோரிக்கையை துரிதப்படுத்தாமல் ஒத்திவைப்பதன் விளைவுகளை முழு நாடும் அனுபவித்து வருவதோடு, அந்த தன்னிச்சையான நடவடிக்கையால் நமது நாடு கொரோனா பேரழிவால் பாதிக்கப்பட்ட முன்னணி நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.


◼️ மூடப்பட்ட பல நாடுகள் தங்கள் மக்களின் வாழ்க்கையை ஆதரிப்பதற்காக நிவாரணப் பொதிகளை அறிமுகப்படுத்தியுள்ளன, ஆனால் இலங்கையில் நடப்பது என்னவென்றால், எங்கள் செல்வாக்கின் காரணமாக  மக்களுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச நிவாரணப் பொதி கூட நிறுத்தி வைக்கப்படுகிறது.


◼️ அரசாங்கம் "மக்களுக்கு தியாகம்” செய்ய அழைக்கிறது, ஆனால் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கிய நாளிலிருந்து மக்கள் செய்த தியாகங்களை அரசாங்கம் பார்க்கவில்லை என்பது போலவும் தெரியாது என்பது போலவும் இருப்பதை எங்களால் நம்பமுடியாததுள்ளது.


◼️ மக்களை தியாகம் செய்யுமாறு கேட்கும் அரசாங்கமே அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியுள்ளது.


◼️ மக்களை தியாகம் செய்யுமாறு கோரும் அரசாங்கமே உணவு செலவளிப்பின் ஆற்றலில் உலகில் மிகவும் வறிய ஐந்தாவது ஸ்தானத்திற்கு இட்டுச் சென்றும்,அவர்களின் ஊதியத்தில் 66% உணவிற்காக செலவழிக்கும் நிலையையும் ஏற்ப்படுத்தியது இந்த அரசாங்கமே.


பணக்கார குபேரர்களுக்கு வரிச்சலுகை அளித்து, நாட்டிற்கு 600 மில்லியன் ரூபாய் வறிவாய் பறிபோக காரணமாக இருந்த இந்த  அரசாங்கத்தாலயே மக்கள் தியாகம் செய்யுமாறு சொல்லப்படுகிறார்கள்.


◼️சீனி மற்றும் தேங்காய் எண்ணெய் மோசடிகள் மூலம் அதன் நண்பர்களுக்கு நிவாரணம் அளித்த அரசாங்கத்தாலயே மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது.


ஒரு நாளைக்கு மூன்று வேளை போக ஒரு வேளையோனும் ஏதாவது சாப்பிடாமல் பெருமூச்சு விடும் நூறாயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில் தியாகம் செய்யுமாறு மக்களிடம் கேட்பதை விட பெரிய கோரிக்கை எதுவும் இல்லை.


கொரோனா பேரழிவின் மத்தியில் வாழ்க்கைக்கும் இறப்புக்கும் மத்தியில் போராடும் மக்களின் நிவாரணத் பொதிக்கும்  மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் இந்த அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற தன்மையின் தரத்தை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.


சஜித் பிரேமதாச

எதிர்க் கட்சித் தலைவர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »