எதிர்வரும் பெரும்போக பயிர் செய்கைக்காக யூரியா உள்ளிட்ட சில வகையான இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று வெளியிட்டார்.
அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள், யூரியா, கல்சியம் கார்பனேட் அல்லது இதர கனிமமற்ற உரங்கள், சூப்பர் பொஸ்பேற் மற்றும் நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் பொஸ்பேற் ஆகிய இரண்டு அல்லது மூன்று மூலக்கூறுகளைக் கொண்ட நைட்ரேட் கலவைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இரசாயன உரங்களின் இறக்குமதியை தடை செய்ய முதலில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை திருத்தி நிதி அமைச்சர் புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.