2023 ஆம் ஆண்டில் மியன்மாரில் பொதுத்தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்தநாட்டின் இராணுவத் தளபதியும் பிரதமருமான மின் ஆங் லயின் தெரிவித்துள்ளார்.
மியன்மாரில் பல கட்சிகளும் பங்கேற்கும் நேர்மையானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கான சூழழை ஏற்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலையானது 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையில் அமுலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மியன்மாரை கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி இராணுவம் தமது கட்டுப்பாட்டுகள் கொண்டுவந்தது.
பின்னர் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட பல அரச தலைவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மியன்மாரில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.