சேஹ்ன் செனவிரத்ன
இலங்கையில் 45.4 சதவீதமான குழந்தைகள் ஏதோ ஒரு வகையில், உடல் அல்லது ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதுடன், 6.9 சதவீதமான குழந்தைகள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பிரிவின் பிரதானி கலாநிதி குமாரி தோரதெனிய தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண ஆளுநரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கையில் சிறுவர் தாய்மாரின் எண்ணிக்கை 4.5 சதவீதம் காணப்படும் அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் இதன் எண்ணிக்கை அதிகமாக்கக் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
தாம் முன்னெடுத்த ஆய்வுகளில் இலங்கையில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர் தொழிலாளர்கள் காணப்படும் நிலையில், தொழிலாளர் திணைக்களம் மற்றும் சிறுவர் பாதுகாப்ப அதிகாரசபை என்பவற்றின் தரவுகளில் இவை மாறுபட்டு காணப்படுகின்றது என்றார். இந்த வேறுபாடும் பாரிய பிரச்சினை என்றார்.