Our Feeds


Monday, August 23, 2021

www.shortnews.lk

கண்டியிலுள்ள பிக்கு ஒருவரின் வாகனத்திலிருந்து 25 சாராய போத்தல்களை கைப்பற்றிய பொலிசார்.

 



சேஹ்ன் செனவிரத்ன


கண்டியிலுள்ள பிரபல பிக்கு ஒருவருக்குச் சொந்தமான அதிசொகுசு வாகனம், மற்றுமொரு வர்த்தகரின் வாகனமொன்றிலிருந்தும் 145 மதுபான போத்தல்கள் மெனிக்ஹின்ன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


குறித்த 2 வாகனங்களிலும் இந்த மாதம் 20ஆம் திகதி, மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்ட போதே, அவை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய வர்த்தகரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த பிக்குவின் வாகனத்திலிருந்து 25 மதுபான போத்தல்களும் குறித்த வர்த்தகரின் வாகனத்திலிருந்து 120 மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பத்து நாள்களுக்கு நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், முடக்க காலத்தில் அதிக விலைக்கு விற்பதற்காகவே, இவ்வாறு மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட வர்த்தகருக்கு சொந்தமாக மதுபானசாலையொன்று இருக்கின்றமையும் தெரியவந்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »