18 தொடக்கம் 29 வயதுக்குட்பட்டோருக்கு அடுத்த இரு வாரங்களுக்குப் பின்னர், தடுப்பூசி வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துவருவதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை 12 முதல் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு வழங்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க கடந்த வாரம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.