Our Feeds


Sunday, August 22, 2021

www.shortnews.lk

100 டன் ஒட்சிசனுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்தியாவின் சக்தி

 



இந்தியாவில் இருந்து 100  மெற்றிக் தொன் ஒட்சிசனை சுமந்து தனது பயணத்தை தொடங்கிய இந்திய கடற்படைக் கப்பலான சக்தி, இன்று (22) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது என்று கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 100 மெற்றிக் தொன் திரவ ஒட்சிசனுடன் கடந்த 19 ஆம் திகதி புறப்பட்ட கப்பல், இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இதேவேளை, 39 மெற்றிக் தொன் ஒட்சிசனைக் கொண்டுவரும் இலங்கை கடற்படையின் சக்தி கப்பலும் தீவை நெருங்குகிறது என்றும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை கடற்படை கப்பலான சக்தி, ஒட்சிசனைக் கொண்டு வருவதற்கு இந்தியாவின் சென்னை துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டது.

இதேவேளை, நேற்று முன்தினம் இரவு  இந்தியாவிலிருந்து 40 மெற்றிக் தொன் ஒட்சிசன், இலங்கையை வந்தடைந்துள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »