Our Feeds


Wednesday, August 25, 2021

www.shortnews.lk

வயிற்றில் உயிரிழந்த 05 மாத குழந்தைக்கு கொரோனா - இன்று உடல் தகனம்.

 



(கம்பளை நிருபர்)


கம்பளை வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெறும் கர்ப்பிணி ஒருவரின் வயிற்றிலிருந்த 5 மாத சிசு  கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.


கம்பளை நுவரெலியா வீதியில் வசித்து வந்ததாகக் கூறப்படும், உயிரிழந்த சிசுவின் 36 வயதான தாய் சில தினங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு கம்பளை கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகிறார்.

இந்நிலையில், குறித்த தாயின் வயிற்றில் இருந்த சிசுவை நேற்று (24) வைத்தியர்கள் பரிசோதனை செய்தபோது குறித்த குழந்தை உயிரிழந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சத்திர சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டு உயிரிழந்த சிசுவின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் மூலமே குறித்த சிசுவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
உயிரிழந்த சிசுவினது சடலம் இன்று (25) கம்பளை பொதுமயான தகனச சாலையில் தகனம் செய்யப்பட்டது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »