Our Feeds


Thursday, July 8, 2021

www.shortnews.lk

கல்விக்காக இலவச ZOOM வசதி எனக் கூறி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது - பொலிசார் எச்சரிக்கை

 



இணைய கல்வி நடவடிக்கைகளுக்கான இலவச ‘ ZOOM ‘ தொடர்புகளை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து பாலியல் தொல்லை புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.


சந்தேக நபர் பிரபல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஊழியர் ஒருவரென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையி , பிடபெத்த பகுதியில் பாடசாலை ஒன்றின் அதிபர் வழங்கிய முறைப்பாட்டில் சில பாடசாலை மாணவிகள் இணையதளத்தின் ஊடாக  பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இணைய கல்வி நடவடிக்கைகளுக்கான இலவச ZOOM தொடர்புகளை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்து சந்தேக நபர் குறித்த மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக் கொண்டுள்ளார். இதன் பின்னர் குறித்த இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு இணையம் ஊடாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சில மாணவிகளின் புகைப்படங்களையும் பெற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் 28 வயதான சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவர் இலங்கையின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் கடமையாற்றுவதுடன் தம்புத்தேகம பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெமுத்து வருகின்றனர்.

இவ்வாறான நபர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுக்கின்றனர். தெரியாத நபர்களுக்கு தொலைப்பேசி இலக்கங்களையோ ஏனைய விபரங்களையோ வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »