Our Feeds


Saturday, July 31, 2021

www.shortnews.lk

இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் டெல்டா திரிபு கொரோனா அதிகரிக்கிறது - WHO கடும் எச்சரிக்கை

 



இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம், டெல்டா திரிபாலேயே  தொற்று அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


மேலும் அதிகரித்த சமூக இயக்கம், சீரற்ற பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகள், சமமற்ற தடுப்பூசி வழங்கல் என்பனவும் கொரோனா அதிகரிப்புக்கு காரணம் என்றும் அறிவித்துள்ளது.


இலங்கையில் உள்ள உலக சுகாதார  ஸ்தாபனத்தின் டுவிட்டர் பதிவிலேயே மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸஸின் செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மாத்திரம் 4 மில்லியன் கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த தொற்றுக்களில் பெரும்பாலானவை தீவிரமாக பரவும் டெல்டா திரிபால் ஏற்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸைத் தடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த 2 வாரங்களுக்குள் மொத்த தொற்றுக்களின் எண்ணிக்கை 200 மில்லியனைக் கடக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். (TM)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »