Our Feeds


Tuesday, July 6, 2021

www.shortnews.lk

ரிஷாதின் வழக்கிலிருந்து தொடர்ந்தும் நீதிபதிகள் விலகல் - நீதியை மறுக்கும் செயல் என பாராளுமன்றில் ஹக்கீம் சாடல் - VIDEO

 



73 நாட்களாக தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின், அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் சமயங்களின் போதெல்லாம், அந்த மனு விசாரணை நடைபெறவுள்ள தினத்தில் உச்ச நீதிமன்ற நீதியரசர்களில் எவராவது ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக, தான் நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக, குறிப்பிட்ட வழக்கு எடுத்துக்கொள்ளப்படும் தருணங்களில் உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கின்றார்.


இது வரிசைக் கிரமமாக இதுவரை நான்கு தடவைகள் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக சிரேஷ்ட அரசியல்வாதியான ரிஷாத் பதியுதீன் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது நீதியும் மறுக்கப்படுகிறது. எனவே, பிரதம நீதியரசர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென சபையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.” என்று முன்னாள் நீதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

ரவூப் ஹக்கீம் எம்.பி யின் இந்த கோரிக்கையை நியாயப்படுத்தி, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷமன் கிரியல்லவும் சபையில் பேசினார். இந்த விடயம் தொடர்பில் நீதியமைச்சர் அலி சப்ரியும் சபையில் பதிலளித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »