Our Feeds


Tuesday, July 6, 2021

www.shortnews.lk

VIDEO: Dr ஷாபியை இனவாதமாக்கி ஆட்சிக்கு வந்தீர்கள் - ஷாபி மீது குற்றம் சுமத்திய பெண்களுக்கு குழந்தையும் கிடைத்து விட்டதே? - சமுதிதவின் சரமாரி கேள்வி

 



குருநாகல் வைத்தியசாலையில் கடமையாற்றிய  Dr ஷாபியின் பெயரை இனவாதமாக்கித்தான் நீங்கள் ஆட்சியை பிடித்தீர்கள். ஆட்சிக்கு வந்த பின் அதைப் பற்றி எந்தவொரு பேச்சையும் காணவில்லை. குறிப்பாக Dr ஷாபி மீது குற்றம் சுமத்திய பெண்களுக்கு குழந்தைகள் கிடைத்துள்ளன. நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் சொன்னவை அனைத்தும் பொய்யாகியுள்ளதே என நேற்றைய தினம் ஹிரு தொலைக்காட்சியின் “சலகுண” நிகழ்ச்சியில் நெறியாளர் ஷமுதித சமரவிக்ரம அமைச்சர் சன்ன ஜயசுமனவிடம் கேள்வியெழுப்பினார்.


ஷமுதிதவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சன்ன ஜயசுமன “நாம் அது தொடர்பில் விசாரனைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம்” என பதிலளித்தார்.


“நீங்கள் எந்த விசாரனைகளையும் முன்னெடுக்க வில்லை. CID யில் Dr ஷாபி தொடர்பில் எவ்வித விசாரனைகளும் நடத்தப்பட வில்லை என  நாம் விசாரித்த போது எமக்கு பதிலளித்துள்ளார்கள் என சமுதித அமைச்சருக்கு பதிலளித்தார். 


சூடாக நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின் முக்கிய பகுதி வீடியோவை கீழே பார்கலாம்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »