Our Feeds


Sunday, July 4, 2021

www.shortnews.lk

VIDEO: கேஸ் பைப் வெடிப்பு - நடுக்கடலில் எரிமலை போல் பெரும் தீ - 05 மணித்தியாளத்தில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

 



கடலில் கொளுந்துவிட்டு எரியும் தீ குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.


மெக்சிகோ வளைகுடாவில் அமைந்துள்ள அந்நாட்டின் நிறுவனமான பெமெக்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் வயல் அருகே கடலுக்கடியில் வெடிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

மஞ்சள் நிறத்தில் தீ கொளுந்து விட்டு எரிந்துக்கொண்டிருந்தன, எரிமலை வெடிப்புகளில் இருந்து வெளியேறும் லாவாக்கள் போல் தண்ணீரில் தீ கொப்பளித்துக்கொண்டிருந்தது. கடலுக்கடியில் சென்ற பைப் லைனில் ஏற்பட்ட விரிசல் காரணமாக எரிவாயு கசிந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இன்று (04) அதிகாலை 5.15 மணிக்கு இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது.

மூன்று கப்பல்களின் உதவியைக் கொண்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் 10.30 மணிக்கு இந்த தீவிபத்து சரிசெய்யப்பட்டுள்ளது.

தீ அணைக்கு பணியில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட காட்சிகள்தான் சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீ விபத்து ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என பெமெக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதன்காரணமாக உற்பத்தியிலும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »