Our Feeds


Thursday, July 8, 2021

www.shortnews.lk

கல்முனை வலய மாணவர்களுக்கு இலவச Tep வழங்கி வைப்பு

 



(சர்ஜுன் லாபீர்)


அரசாங்கத்தின் கொள்கை திட்டத்தின் கீழ் ஆசிரியர்களும், மாணவர்களும் Zoom தொழில்நுட்பத்தின்  மூலம் கல்வி கற்பதற்கும், கற்பிப்பதற்குமான இலவச Tap வழங்கும் செயற்திட்டம் நாடுபூராகவும் நடைபெற்று வருகின்றது. 


அந்த வகையில் கல்முனை வலயத்தில் உள்ள 23 பாடசாலைகளுக்கும் அதில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் உள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்குமாக சுமார் 1500 Tep கள் முதற்கட்டமாக உரிய பாடசாலை அதிபர்களிடம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (8) கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் நடைபெற்றது. 


இந் நிகழ்வில் கணக்காளர் வை. ஹபிபுல்லா, பிரதி கல்விப் பணிப்பாளர்களான ஜெயந்திமாலா ஜிஹானா ஆலீப், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான என்.எம்.ஏ மலீக்,திருமதி மலீக் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


நேற்றிரவு கொழும்பில் இருந்து கல்முனைக்கு வந்த Tepகளை உடன் உரிய ஆசிரியர்களுக்கும்,மாணவர்களுக்கும் வழங்கி வைப்பதில் கணக்காளர் வை

ஹபிபுல்லா முனைப்புடன் செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »