Our Feeds


Saturday, July 31, 2021

www.shortnews.lk

SHORT_BREAKING: டெல்டா கொரோனா வைரஸின் அதிஉச்ச தாக்கம் பற்றிய ரகசிய ஆய்வை பகிரங்கப்படுத்தியது நிவ்யோர்க் டைம்ஸ்.

 



டெல்டா கொவிட் திரிபானது அனைத்து வைரஸ்களை விடவும் கடுமையான நோய் நிலைமைகளை ஏற்படுத்துவதுடன், பெரியம்மை போல எளிதில் பரவக்கூடியது என்றும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.


பகிரங்கப்படுத்தப்படாத குறித்த ஆய்வறிக்கையில் நகலொன்றை நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களை போன்றே பூரணமான தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்களாலும் இந்த டெல்டா வைரஸ் பரவும் ஆற்றல் காணப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் மூக்கிலும் தொண்டையிலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களிடையே காணப்படும் அதே அளவு வைரஸை காவிச் செல்வதால் இந்த நிலைமை ஏற்படுவதாக  CDC  எனப்படும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரோசெல் வலென்ஸ்கி முன்வைத்துள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா கொவிட் வைரஸ் திரிபானது சார்ஸ், அம்மை, எபோலா, பெரியம்மை ஆகியவற்றை விட அதிகமாக பரவுகிறது என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட B.1.617.2 என பெயரிடப்பட்டுள்ள டெல்டா கொவிட் திரிபு வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை மேலும் வலுவடைந்துள்ளதாக அமெரிக்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுமார் 35,000 அமெரிக்கர்கள் டெல்டா கொவிட் திரிபால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.

இருப்பினும், கொவிட் தொற்றால் ஏற்படக்கூடிய பாரதூரமான நோய் நிலைகளில் 90 சதவீதத்தை கொவிட் தடுப்பூசிகள்  கட்டுப்படுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »