Our Feeds


Saturday, July 10, 2021

www.shortnews.lk

PHOTOS: கொழும்பு − ஹட்டன் வீதியில் பாரிய மண்சரிவு − அதிவுயர் அபாயத்தில் கித்துல்கல

 



கொழும்பு − ஹட்டன் பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளது.


கித்துல்கல − யட்டிபேரிய பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாகவே போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மண்ணை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், மீண்டும் மீண்டும் மண் சரிந்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

அதனால், மண்ணை அப்புறப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பி வைக்க பொல்பிட்டிய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

மேலும், கித்துல்கல முதல் கினிகத்ஹேன பகுதி வரை பல்வேறு இடங்களில் மண்மேடுகள் சரிந்துள்ளதாக தெரிய வருகின்றது.

 

அத்துடன், குறித்த பகுதியில் தொடர்ந்தும் அதிக மழை பெய்து வருவதனால், இந்த பகுதி அதிவுயர் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (TC)







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »