Our Feeds


Monday, July 5, 2021

www.shortnews.lk

தொலைபேசி ஆரம்பர பொருள் என்றால், இணைய வழியில் கல்வி எதற்கு? - எதிர்க்கட்சி MP கேள்வி

 



அலைபேசி குளிர்சாதனப் பெட்டி தொலைக்காட்சி உள்ளிட்டவைகளை ஆடம்பர பொருள்கள் என கூறி அவற்றின் இறக்குமதியை அரசாங்கம் தடைசெய்யப் போவதாக தெரிவித்த  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இணையவழியில் கல்வியைப் படிக்குமாறு மாணவர்களிடம் கூறுகின்றனர்.


ஆனால் அலைபேசியை ஆடம்பர பொருள் என தெரிவித்து இறக்குமதியைத் தடை செய்ய நினைப்பது நகைப்புக்குரிய விடயம் என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்

எனவே செல்லும் பயணம் தெளிவாக இருக்க வேண்டும்.தேசபக்தி கதைகள் ஊடாக இனவாதங்களை தூண்டி அரசியல் பழிவாங்கல் கதைகளைக் கூறும் இந்த அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவ பலவீனம்  குறித்து மக்கள் இப்போது விழிப்படைந்து உள்ளனர் என்றார்.

நாட்டில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஆசனத்தை மாற்றப் பார்ப்பதாகவும் தமக்கு முடியாத விடயத்தை மற்றொருவரைக் கொண்டு  வந்து செய்யப் போகின்றனர்.

இனி குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து உண்டு மகிழ்ந்து குடும்பத்திலிருந்து வேறு யாரை கொண்டு வருவதென தீர்மானிப்பர்.

பின்னர் நாட்டில் ஜனநாயகம் இருப்பதை காட்டுவதற்காக கட்சியின் ஏனைய உறுப்பினர்களிடம் இது குறித்து தெரிவித்து மற்றுமொரு சகோதரரையும்  கொண்டு வருமாறு கூறுவர்.

மூன்றில் இரண்டு அதிகாரம் வழங்கி 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினாலும்  இன்னும்  இவர்களால் பிரச்சினையைத்  தீர்க்க முடியவில்லை. எனவே ஆசனத்தை மாற்றினால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமா என்பது தொடர்பில் மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »