Our Feeds


Thursday, July 8, 2021

www.shortnews.lk

ஜே. ஆர் ஜயவர்தனவின் அரசியல் நிலையை கோட்டாவும் அறிந்து கொள்ள வேண்டும் - JVP

 



பாராளுமன்றில் இன்று (08) சமர்ப்பிக்கப்படவுள்ள  கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பிலான புதிய சட்டமூலத்துக்கு எதிராக எழும் மக்களின் போராட்டத்தை தடுப்பதற்காகவே அரசாங்கம்  ஆர்ப்பாட்டம் மற்றும் ஒன்று கூடலுக்கு மறு அறிவித்தல் விடுக்கும் வரை தடை விதித்துள்ளதென தெரிவித்த ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தனிமைப்படுத்தல் சட்டத்தின் ஊடாக அரசாங்கம் தனது இயலாமையினை மறைத்துக் கொள்கிறது என்றார். 


கட்சி தலைமையகத்தில்  நேற்று(7)  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயெ அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை கொண்டு அரசாங்கம் தனக்கு தேவையான மற்றும் நாட்டுக்கு முரணான விடயங்களை செயற்படுத்திக் கொள்கிறது.  அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராடும் போது தனிமைப்படுத்தல் சட்டம் ஊடாக மக்களின்   கருத்துக்கள் முடக்கப்படுகிறது.

இதனை பாரியதொரு ஜனநாயக உரிமை மீறலாக கருத வேண்டும் என்றார். இலவச கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. கொத்தலாவல  பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பிலான புதிய சட்ட மூலம் நடுத்தர வர்க்கத்தினரது பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் அத்துடன் இலவச கல்வியை பெருமளவில் கேள்விக்குள்ளாக்கும். 

இச்சட்ட மூலத்தினால் ராஜபக்‌ஷ ர்களின் பரம்பரைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் அவர் இந்நாட்டில் இலவச கல்வியை பெறுவது கிடையாது. மக்களின் போராட்டத்தை முடக்கும் அரச தலைவர்கள் நெடுநாள் ஆட்சியில் இருக்கவில்லை.

என்பதை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்‌ஷ விளங்கிக் கொள்ள வேண்டும். சர்வதேச அரசியல்  வரலாறு தொடர்பில் அறிய நேரம் கிடைக்காவிட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர் ஜயவர்தனவின் அரசியல்  நிலையினை அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »