இணையத்தள வசதிக்காக அடர்த்தியான காட்டுப் பகுதி ஊடாக சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரம மாணவர்கள் மலையேறுவதாக அல் ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் மொனராகலை மாவட்டத்தின் பிபில பிரதேசத்திலுள்ள போஹிட்டியாவ கிராமத்தில் பதிவாகியுள்ளது.
இணையத்தள வசதியினை பெறுவதற்காக சிறுத்தைகள் மற்றும் யானைகள் காணப்படும் இந்த அடர்த்தியான காட்டுப் பகுதியில் ஒரு நாளைககு இரண்டு தடவைகள் விஜயம் செய்வதாக மாணவரொருவரின் தந்தையான விவசாயி தெரிவித்தார்.
இந்த மாணவர்கள் இணையத்தள வசதிக்காக மலைபேறும் சந்தர்ப்பத்தில் அவர்களின் பாதுகாப்பிற்காக அவர்களை பெற்றோரும் செல்வது வழமையாகும்.