Our Feeds


Friday, July 30, 2021

www.shortnews.lk

BREAKING: அனைத்து வழக்குகளில் இருந்தும் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன விடுதலை

 



இலஞ்ச ஊழல் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு இருந்த 8 வழக்குகளில் இருந்தும் அவரை விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று (30) கொழும்பு பிரதான நீதவான் புத்திக சீ. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கை தாக்கல் செய்த சந்தர்ப்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர்கள் மூவர் உரிய ஆவணங்களை முன்வைக்காத காரணத்தினால் குறித்த வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது கடினமான விடயம் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்ப்பில் ஆஜராக அதன் உதவி பணிப்பாளர் அசித அன்டனி நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வழக்கை தொடர்ந்து நடத்தி செல்வது கடினமாயின் பிரதிவாதியை விடுதலை செய்யுமாறு சரண குணவர்தன சார்ப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த நீதிபதி, இலஞ்ச ஊழல் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 8 வழக்குகளில் இருந்து பிரதிவாதியான சரண குணவர்தனவை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »