Our Feeds


Friday, July 16, 2021

www.shortnews.lk

BREAKING: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; காத்தான்குடியை சேர்ந்த இருவர் வழக்கிலிருந்து முற்றாக விடுவித்து தீர்ப்பு.

 



(கனகராசா சரவணன்)


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட காத்தான்குடியைச் இருவருக்கு எதிராக போதிய சாட்சியமில்லாத காரணத்தால் வழக்கைத் தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்ததையடுத்து இருவரையும் இந்த வழக்கில் இருந்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சி.எம். றிஸ்வான் முற்றாக விடுவித்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

ஸஹ்ரான் குழுவினரோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் காத்தான்குடியை சேர்ந்தவரும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றிய ஒருவரும் கடந்த 2019 ஏப்ரல் 28 ஆம் திகதியும் கடந்த 2019 யூன் 20 ஆம் திகதி காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவருமாக இருவர் ஆம் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இருவரையும் கடந்த 2020 ஆம் ஆகட்ஸ் மாதம் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டு தொடர்ந்தும் வழக்கு விசாரணைகளுக்கு நீதிமன்றில் ஆஜராகி வந்துள்ள இருவரது வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரிடமிருந்து இவர்களுக்கு எதிராக வழக்கு தொடர போதுமான சாட்சியங்கள் இல்லை என மட்டக்களப்பு நீதிமன்றுக்கும் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது

இதனையடுத்து கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நகர்வு மனு தாக்குதல் செய்யப்பட்டு வழக்கு எடுக்கப்பட்டதையடுத்து இருவரையும் நீதிவான் ஏ.சி.எம் றிஸ்வான் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய, இருவருக்கும் எதிராக வழக்குக்கு போதுமான சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் இவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »