Our Feeds


Sunday, July 11, 2021

www.shortnews.lk

BREAKING: வீரவன்ச, கம்மன்பில ஆகியோரின் அமைச்சுக்களில் அதிரடி மாற்றத்திற்கு தயாராகிறது அரசாங்கம்

 



அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரின் வசமிருக்கும் அமைச்சுகளில் சிலவற்றை அவ்விருவரிடமிருந்தும் அபகரிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது.


அவ்விருவரிடமிருந்தும் மாற்றப்படும் அமைச்சின் விடயதானங்களுக்கு அமைய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மேலும் 3 அமைச்சுகளை வழங்குவதற்கு ஆலோசித்து வருவதாகவும் அறியமுடிகின்றது.

நிதியமைச்சராக பெசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை விரைவுப்படுத்தி, இலக்கை எட்டிக்கொள்வதற்கு புதிய அமைச்சரவை மாற்றமொன்றை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

அதனடிப்படையில், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் கீழான ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்படவேண்டிய அமைச்சுப் பதவிகளை, அக்கட்சிக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் நிமிர்த்தமே அமைச்சர்களான உதயகம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரிடமிருக்கும் அமைச்சுகளின் விடயதானங்களை பகிர்வதற்கு அரசாங்கம் கலந்தாலோசிப்பதாக அறியமுடிகின்றது.

இந்நிலையில், அரசாங்கத்தால் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கும் அமைச்சுகளை பொறுப்பேற்றுக்கொள்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

இதேவேளை புதிய அமைச்சவை மாற்றத்தில், சுகாதாரம், பொலிஸ், தொழில் மற்றும் கல்வி ஆகிய அமைச்சுக்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »