(எம்.மனோசித்ரா)
இலங்கை வான் பரப்பை பயிற்சி நடவடிக்கைகளுக்காக இந்தியா பயன்படுத்துவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.
இது குறித்து குறிப்பிடுகையில், பிறிதொரு நாடுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட இலங்கை வான் பரப்பை கோரியதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் தவறானதொரு செய்திகாகும். அவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைக்கவோ அதனை இலங்கை மறுக்கவோ இல்லை.
ஹம்பாந்தோட்டையை அண்மித்த பகுதியில் அமெரிக்க படையினருடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடவோ இவ்வாறு கோரிக்கை விடுத்தாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அது முற்றிலும் தவறான செய்தி உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று இதற்கு முன்னரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மற்றுமொரு நாட்டுடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுப்பட இந்தியா இலங்கையை கோரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.