Our Feeds


Thursday, July 1, 2021

www.shortnews.lk

BREAKING: தான் பெற்ற குழந்தையை உயிருடன் புதைத்த தாய்! அதிர்ச்சி சம்பவம்!

 



தும்மலசூரிய, மரக்களமுல்ல பிரதேசத்தில் தாய் ஒருவரால் பிறந்த குழந்தை ஒன்று உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.


பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய தும்மலசூரிய பொலிஸாரினால் குறித்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தகவல் வழங்கிய நபர், தாய் ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்து வீட்டின் பின்புறத்தில் புதைத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இன்று மதியம் இடம்பெற்றுள்ள நிலையில் குழந்தையின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை மேற்கொண்டு குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் அறிக்கை இடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தும்மலசூரிய பொலிஸாரினால் குறித்த தாய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளார்.

தும்மலசூரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »