Our Feeds


Tuesday, July 27, 2021

www.shortnews.lk

BREAKING: ரிஷாத் பதியுத்தீன் வீட்டில் மலையக சிறுமி தங்கிய அறையின் காட்சிகள் - PHOTOS

 



ஊடகவியலாளர் சப்ராஸ்


முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமியான ஹிசாலினி ஜுலை மாதம் மூன்றாம் திகதி தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


பின்னர் கடந்த பதினைந்தாம் திகதி ஜுலை மாதம் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்சியையும் ஏற்படுத்தியது.


இலங்கையின் உள்ள ஒருசில அரசியல் வியாபாரிகளுக்கு இந்த விடயத்தை அரசியலாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் உறவுக்கு மிகவும் பெரும் விரிசலை ஏற்படுத்தி விட்டார்கள்.


உண்மையில் என்ன நடந்தது ? ஹிசாலினியின் தாயார் கூறுவது உண்மையா ? அவர் கூறுவது எதுவும் உண்மையில்லை ஏன் ஒரு தாயார் இவ்வாறானதொரு பொய்யை சொல்கிறார் என்று இறைவனுக்கும் அவரை இயக்கும் அந்த அரசியல் வியாபாரிகளுக்கும் தான் தெரியும்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹிசாலினியின் தாயார் எனது பிள்ளையை நாய் அடைக்கும் ஒரு இடத்தில் அடைத்து வைத்து இருந்ததாகவும் எனது பிள்ளைக்கு சித்திரவதை செய்யப்பட்டதாகவும் குறித்த தாயார் கூறியிருந்தார்.


ஹிசாலினியின் தாயார் கூறியது போலே எதும் அங்கு நடக்கவில்லை  ஹிசாலினி தங்கி இருந்த ரூம்மை (Room) நாம் புகைப்படங்களில் காட்டுகிறோம்.


ஹிசாலினியின் தாயிக்கு அரசியல் வியாபாரிகளால் மூளைச் சலவை செய்யப்படுவது தெட்டத்தெளிவாக தெரிகிறது.


ஹிசாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தவித மாற்றுகருத்துக்களும் கிடையாது.


இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் அநியாயமான முறையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் மனைவி, மனைவியுடைய வாப்பா, மனைவியுடைய தம்பி என ஒரு நியாயமும் இல்லமால் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். ரிஷாட் பதியுதீனின் பிள்ளைகள் தட்டுத்தடுமாறி நிலைகுலைந்து மனதளவில் பாதிப்படைந்து விட்டார்கள். தொழுது கொண்டு நோன்பு பிடித்துக்கொண்டு அழுதே வாறே ஒவ்வொரு இரவு பொழுதுகளையும் கழிக்கிறார்கள். இந்த பிள்ளைகளுக்கு யார் நியாயம் கேட்டு போராடுவது ? இவர்களின் இதயங்கள் என்ன இரும்பிலா செய்யப்பட்டுள்ளது ? யாவும் அறிந்தவன்  அல்லாஹ் ஒருவனே. மரணித்த உடலுக்கு நீதி கோரும் அரசியல் வியாபாரிகளே ரிஷாட் MP யின் பிள்ளைகளின் நிலைமை என்ன ? அந்த பிள்ளைகள் என்ன பாவம்தான் செய்தார்கள் ?


மனிதாபிமானம் இல்லாத சமூகமா நம் சமூகம் ? சிறுபான்மை மக்களே சற்று சிந்திக்க மாட்டிர்களா ?


அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »