Our Feeds


Friday, July 2, 2021

www.shortnews.lk

BREAKING: 03 மொழிகளிலும் ஒரே குர்ஆன் தர்ஜுமாவை வெளியிட தீர்மானம் - இதுவரை வெளியான தர்ஜுமாக்களின் நிலை ?

 





சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் பல்வேறு அல்-குர்ஆன்  மொழியெர்ப்புக்கள் காணப்படுவதால் குர்ஆன் சொல்ல வருகின்ற கருத்துக்களை பிழையாக விளங்கவும் விளக்கவும் வழிவகுக்கிறது.  அந்த வகையில் ஒரு மத்திய குழுவின் கண்காணிப்பில் ஒரு மொழிபெயர்ப்பு பொதுமக்கள் பாவனைக்காக பதிக்கப்படல் வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்படுகிறது.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி விசாரனை செய்து அறிக்கை சமர்ப்பித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைககப்பட்ட பரிந்துரைகளில் முக்கியமானது ஒரு குர்ஆன் மொழிபெயர்ப்பு என்பதாகும். 


மூன்று மொழிகளிலும் இலங்கையில் ஒரு மொழிபெயர்ப்பு வெளியிடப்படும் வரையில் எந்த தர்ஜமா பாவிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையையும், இலங்கையில் வெளியிடப்படும் தர்ஜமாவுக்கான ஏற்பாடுகள் எப்படி அமையவேண்டும் என்பது தொடர்பாகவும் உலமாக்களதும் அமைப்புகளதும் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.


இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கடிதம் மூலம் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா, ஷரிஆ கவுன்சில், தேசிய ஷூரா கவுன்சில், SCOT ஆகிய அமைப்புகளின் அபிப்பிராயங்கள் கேட்கப்பட்டுள்ளன.


இது பற்றிய அப்பிராயங்களை நேரடியாக director@muslimaffairs.gov.lk என்ற ஈமெய்லுக்கு 05.07.2021 க்கு முன்னதாக அனுப்பி வைக்கவும்.


ஏ.பீ.எம்.அஷ்ரப்

பணிப்பாளர், 

முஸ்லிம் சமய பண்பாட்டல்கள் திணைக்களம்.

02.07.2021






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »