Our Feeds


Friday, July 2, 2021

www.shortnews.lk

இந்து ஆலயங்களில் திருவிழாக்கள், பூஜைகளுக்கு அனுமதி

 



இந்து ஆலயங்களில் வழக்கமான பூஜைகள், பிரார்த்தனைகள் மற்றும் ஆலய திருவிழாக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையினருடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் மாவட்ட செயலக ஊடகப்பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.


கொவிட் மூன்றாவது அலை மிகவும் உக்கிரமடைந்து காணப்பட்ட காலப்பகுதியில் சுகாதார அமைச்சினால் இந்து ஆலயங்களில் நிகழ்த்தப்படும் வழமையான பூஜைகள், பிரார்த்தனைகள் மற்றும் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய கொவிட் நிலையினை கருத்திற்கொண்டு இந்து ஆலயங்களில் வழமையாக இடம்பெறும் நித்திய பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகளை அதிகபட்சமாக ஐந்து பேருடன் நடத்தலாம் என்றும், வருடாந்த திருவிழாக்களை பொது மக்களது பங்குபற்றுதலுடன் நடத்த முடியாதெனவும், அதிகபட்சமாக 15 ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் குறித்த பகுதிக்கான சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் நடாத்துவதற்கு சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அனுமதியளித்துள்ளார் என மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் இதன்போது தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »