கடலுக்குள் புகுந்த இரு யானைகள் பங்களாதேஷ் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த யானைகள் மியன்மாரிலிருந்து எல்லையைக் கடந்து பங்களாதேஷுக்கு வந்தவை என நம்பப்படுகிறது. பங்களாதேஷின் தென்பகுதியிலுள்ள தெக்னாவ் எனும் கரையோர நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த யானைகள் காணப்பட்டன.
அச்சமடைந்த உள்ளூர் மக்கள் இந்த யானைகளை விரட்டிய நிலையில் அவை கடற்கரையை நோக்கிச் சென்றன.
இந்த யானைகள் சுமார் 4 தினங்கள் மக்களால் சூழப்பட்ட நிலையில், கடற்கரையில் இருந்தன.
பின்னர் அவை வங்காள விரிகுடா கடலுக்குள் நீந்த ஆரம்பித்தன.
இந்நிலையில் இது குறித்து அறிந்த அதிகாரிகள் இந்த யானைகளை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதையடுத்து கயிறுகளைப் பயன்படுத்தி, யானைகள் மீண்டும் கரைக்கு கொண்டுவரப்பட்டன.
இந்த யானைகளுக்கு உணவுகள் வழங்கப்படுவதாகவும் அவை அருகிலுள்ள காடு ஒன்றுக்கு அனுப்பப்படும் எனவும் உள்ளூர் அதிகாரி சயீத் ஆஷிக் அ1ஹ்மத் தெரிவித்துள்ளார்.