Our Feeds


Tuesday, July 13, 2021

www.shortnews.lk

ஊடகங்களை அடக்குவது நாகரீகமான நாட்டின் யதார்தம் அல்ல - சஜித் கடும் சாடல்

 



ஊடகங்களை அடக்கத் தயாராகும் எவருக்கும் அவ்வாறு செய்ய அனுமதிக்கமாட்டோம் என்றும் அவ்வாறான சக்திகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சியினர் போராடுவோம் என்றும்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


இலங்கை கடற் பரப்பின் எல்லைக்குள் அண்மையில் தீப்பற்றிய  எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து நீதி அமைச்சில் இன்று (12) திங்கட்கிழமை நடைபெற்ற மறு ஆய்வுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, ​​அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சம்பந்தப்பட்ட கலந்துரையாடலில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சித் தலைவரை அழைத்தார். 

இதன் பிரகாரமே எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய மறு ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க் கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய,

"ஊடகங்களை அடக்குவதற்கு அரசாங்கம் செயல்படுகிறது என்று பரவும் செய்தி குறித்து கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், கெஹெலிய ரம்புக்வெல்ல தான் ஒரு சட்டத்தரணிகள் குழுவைக் கொண்டு வந்து கலந்துரையாடியதாக ஒப்புக் கொண்டதாகக் கூறினார்.

மக்களின் துன்பங்களை நாட்டிற்குச் சொல்லும் ஊடகங்களை அடக்குவதற்கு  எந்த உரிமையும் இல்லை என்றும், அதிகாரத்திற்கு வரும் வரை ஊடகங்கள் மீதுள்ள அன்பு அதிகாரத்திற்கு வந்த பின்னரும் இருக்க வேண்டும்.

ஊடகங்களை அடக்குவது ஒரு நாகரிக நாட்டிலோ அல்லது உலகிலோ ஒரு யதார்த்தம் அல்ல என்றும், சுய கட்டுப்பாடுகள் மட்டுமே ஊடகங்களுக்கு இருக்க வேண்டும். கல்வித் தொழிற் சங்கங்கள் மற்றும் கல்வியாளர்கள் முன்வைத்த போராட்டங்களில் அரசாங்கம் நடந்து கொண்ட விதம் மிகவும் அருவருப்பானது" என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »