Our Feeds


Thursday, July 22, 2021

www.shortnews.lk

திருமண நிகழ்வுகளை நடத்தத் தடை விதிக்கப்படுமா? - தீவிரமாக ஆராய்கிறது அரசு

 



திருமண நிகழ்வுகளை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்துமாறு அரசு விடுத்துள்ள வேண்டுகோள் பலனளிக்காத நிலையில், திருமண நிகழ்வுகள் நடத்தப்படுவதை தற்காலிகமாக நிறுத்துவது பற்றி அரசு ஆலோசித்து வருகிறது.


150 பேருடன் திருமண நிகழ்வுகளை நடத்த அரசு அனுமதித்திருந்தாலும் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் நடந்த திருமண நிகழ்வுகளில் 500 ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருப்பதாக பாதுகாப்புத்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அத்துடன் திருமணத்தையொட்டிய வரவேற்பு நிகழ்வுகளும் தடல்புடலாக பல மண்டபங்களில் நடந்துள்ளதால் ‘திருமண கொத்தணி ‘பரவும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதனால் திருமண நிகழ்வுகள் நடத்தப்படுவதை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து பற்றி ஆராயப்படுகிறது. இன்று வெள்ளிக்கிழமை இதுதொடர்பில் விசேட அறிவிப்பு வெளிவருமென அறியமுடிகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »