Our Feeds


Saturday, July 31, 2021

www.shortnews.lk

தொழிலுக்குச் சென்றுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் வேண்டும் - ஜீவன் வலியுறுத்தல்

 



நுவரெலியா பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம், பிரதேச செயலாளர் விதுல சம்பத் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

சுயத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் காளான், ஸ்டோபரி, ஆணைக்கொய்யா போன்றவற்றின் உற்பத்தி மூலமான சுயத்தொழில்களை ஊக்குவிப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

அத்தோடு நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் பொருளாதார ரீதியில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அவர்களுக்கான நிதி உதவியையும் அமைச்சர் வழங்கினார்.

கொவிட்-19 பற்றிய தற்போதைய தீவிர நிலைத் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதோடு கொவிட்-19 தொற்றின் செயற்பாடுகளுக்காக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் மூலம் 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியினை கொவிட்-19 தொடர்பான அனைத்து திட்டங்களுக்கும் பயன்படுத்த முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கொட்டகலை நகரில் பொலிஸ் நிலையத்தை அமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஏனைய பிரதேசங்களில் 500 அல்லது ஆயிரம் பேருக்கு ஒரு கிராம உத்தியோகத்தர் என்ற ரீதியல் இருக்கும் நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் அதிக தோட்ட பகுதிகளில் அதாவது ஆறாயிரம் அல்லது ஏழாயிரம் பேருக்கு ஒரு கிராம உத்தியோகஸ்தர் கடமையாற்றுகின்றனர். எதிர்காலத்தில் ஆயிரம் பேருக்கு ஒரு கிராம உத்தியோகத்தரை நியமிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலையை இடை நிறுத்தி தொழிலுக்குச் சென்றுள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை விரைவில் தயார் செய்து தரும்படியும் இராஜாங்க அமைச்சர் கேட்டுக் கொண்டார் . அதேபோல் கல்வி கற்கும் வயதில் பிள்ளைகளை தொழிலுக்கு அமர்த்துபவர்களுக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் நுவரெலிய மாவட்ட செயலாளர் விதுல சம்பத் கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந், நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ், அக்கரபத்தன பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வன், தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவர் பாரதிதாசன், அரச திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »