Our Feeds


Thursday, July 1, 2021

www.shortnews.lk

புத்தளம் நகர, புதிய நகர பிதாவாக புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் தலைவர் ரபீக் போட்டியின்றி தெரிவு!

 



(எம்.யூ.எம்.சனூன்)


புத்தளம் நகர சபையின் புதிய தலைவராக எம்.எஸ்.எம் ரபீக் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் மறைவை தொடர்ந்து, புதிய நகர பிதாவை தேர்ந்தெடுப்பதற்கான விசேட சபை அமர்வு நகர சபை சபா மண்டபத்தில் இன்று (01) காலை இடம் பெற்றது.


இதன்போதே புதிய நகர பிதாவாக எம்.எஸ்.எம்.ரபீக் போட்டியின்றி தெரிவானார்.

சபை அமர்வில் நகர சபையின் 19 அங்கத்தவர்களும் பிரசன்னமாயிருந்தனர்.

கடந்த நகர சபை தேர்தலில் கே.ஏ.பாயிஸை தலைமையாகக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் நகர சபையை கைப்பற்றியிருந்தது.

பாயிஸின் மறைவுக்கு பின்னர் புதிய நகர பிதா ரபீக்கை நகர பிதாவாக போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சிபாரிசு செய்திருந்தார்.

இதேவேளை நகர சபையில் ஏற்பட்டுள்ள பாயிஸின் வெற்றிடத்தை நிரப்புவதற்காக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்ட அஹமத் நெய்னா மரிக்கார் ஜவுபர் மரிக்கார் அக்கட்சியின் செயலாளரினால் பெயர் குறிப்பிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் (29) வெளியிடப்பட்டதையடுத்து அவர் நகர சபை உறுப்பினராக பங்கேற்றமையும் குறிப்பிடத்தகக்கது.

புதிய நகர பிதா எம்.எஸ்.ரபீக் புத்தளம் நகர சபையில் நீண்டகாலம் நகர சபை உறுப்பினராக செயற்பட்டுள்ளதோடு புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் தலைவராகவும் கடமையாற்றி வருகிறார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »