இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பிறகும் முகக்கவசம் அணிய மறக்கவேண்டாம் என, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே கேட்டுக்கொண்டார்.
கொழும்பில் இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் தொடர்ந்து கூறுகையில், “ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது.
எனினும், தற்போது அங்கு கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. அதனையடுத்து, மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே, இலங்கையில் உள்ள மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பிறகும் முகக்கவசம் அணிய மறக்க வேண்டாம்.
முகக்கவசம் அணியும்வரை, மீற்றர் இடைவெளியை கடைபிடிக்கும் வரை, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை முடிந்தளவு தவிர்க்கும் வரை கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் குறைவாகவே காணப்படும்” என்று அவர் கூறினார்.