Our Feeds


Monday, July 12, 2021

SHAHNI RAMEES

பருப்பு, சீனி விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

 


பருப்பு மற்றும் சீனியின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களின் ஊடாக மாத்திரம் குறைந்த விலையில் பருப்பு மற்றும் சீனியை கொள்வனவு செய்வதற்கு நுகர்வோருக்கு சந்தர்ப்பம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக, ஒரு கிலோகிராம் பருப்பு 175 ரூபாவுக்கும் ஒரு கிலோகிராம் சீனி 110 ரூபாவுக்கும் நுகர்வோருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »