Our Feeds


Wednesday, July 14, 2021

www.shortnews.lk

வழமைக்கு மாறாக மன்னாரில் கடுமையாக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் - பட்டியல் இணைப்பு

 



நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 1,413 பேரில் அதிகமானோர் மன்னார் மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.


கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அறிக்கையில், மன்னார் மாவட்டத்தில் 248 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் கடற்படைத் தளத்திலிருந்தே இந்த தொற்றாளர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் 156 பேருக்கும், கம்பஹாவில் 210 பேருக்கும், களுத்துறையில் 145 பேருக்கும். கண்டியில் 51 பேருக்கும், குருநாகலையில் 40 பேருக்கும், காலியில் 146 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 53 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

கேகாலையில் 11 பேருக்கும், புத்தளத்தில் 2 பேருக்கும், அநுராதபுரத்தில் ஒருவருக்கும், மாத்தறையில் 22 பேருக்கும், பொலனறுவையில் 14 பேருக்கும், அம்பாறையில் 58 பேருக்கும், நுவரெலியாவில் 13 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

இரத்தினபுரியில் 100 பேருக்கும், ஹம்பாந்தோட்டையில் 20 பேருக்கும், பதுளையில் 33 பேருக்கும், மட்டக்களப்பில் 19 பேருக்கும், மொனராகலையில் 6 பேருக்கும், கிளிநொச்சியில் 15 பேருக்கும், திருகோணமலையில் 14 பேருக்கும், மாத்தளையில் 22 பேருக்கும், வவுனியாவில் 5 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »