மாரவில, மாவில பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் அத்துமீறி பிரவேசித்த கும்பல் ஒன்று அங்கிருந்த மூன்று பெண்களை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
காதல் விவகாரம் ஒன்று தொடர்பில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீட்டினுள் பிரவேசிக்கும் பெண்கள் சிலர் அங்கிருந்த பெண்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் நிலையில் பின்னர் அங்கு ஆண்கள் சிலரும் புகுந்து குறித்த பெண்களை தாக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகி உள்ளது.
குறித்த தாக்குதல் இடம்பெற்ற பின்னர் சம்பவ இடத்தில் இருந்து வாள்கள், பொல்லுகள் மற்றும் இரும்பு சங்கிலிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட குழுவினை சேர்ந்த யுவதி ஒருவரும் தாக்குதலுக்கு உள்ளான குழுவை சேர்ந்த இளைஞன் ஒருவரும் காதலித்து வந்துள்ள நிலையில் பின்னர் அவர்கள் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குறித்த இளைஞன் வௌிநாடு சென்றுள்ளதாகவும் பின்னர் யுவதியின் புகைப்படங்களை மாற்றியமைத்து சமூக ஊடகங்களில் வௌியிட்டுள்ளதாக தெரிவித்து இளைஞனின் தாயாருக்கு பல சந்தர்ப்பங்களில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.