Our Feeds


Saturday, July 24, 2021

www.shortnews.lk

எதிர்காலத்தில் சிறந்த ஓர் ஆட்சியை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம்! - ரணில் விக்கிரமசிங்க

 



(இராஜதுரை ஹஷான்)


பெசில் ராஜபக்க்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல. ஆகவே அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி நீதிமன்றம் செல்ல முடியாது. ஆனால் குடும்ப ஆட்சியில் நாட்டு மக்களின் எதிர்காலம் கேள்விக்கு உள்ளாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இளம் ஊடகவியலாளர் அமைப்பு ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அவர் , மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்க்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்டவிரோதமானது என ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். இவரது நாடாளுமன்ற உறுப்புரிமை சட்டவிரோதமானது என ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட வல்லுனர்கள் குறிப்பிடவில்லை. ஆகவே நிதியமைச்சரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி நீதிமன்றம் செல்ல முடியாது.

மேலும் நல்லாட்சி அரசாங்கத்தில் பல விடயங்களை செயற்படுத்த முடிந்தது. இருப்பினும் பல தடைகளும் காணப்பட்டன. இனிவரும் காலங்களில் சிறந்த ஓர் ஆட்சியை எதிர்பார்த்துள்ளோம். அதற்கான நடவடிக்கைள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »