Our Feeds


Thursday, July 22, 2021

www.shortnews.lk

டெல்டா கொரோனா வைரஸ் சமூகத்துக்குள் பரவவில்லை என காண்பிக்க முயற்சி - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

 



டெல்டா வைரஸ் இன்னமும் சமூகத்துக்குள் பரவவில்லை என காண்பிக்க சுகாதார அமைச்சு முயற்சிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்திய ஷெனால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.


இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், முதலாவது கொரோனா வைரஸ் அலைக்குப் பின்னர், நாட்டு மக்களும் அரசாங்கமும் கொரோனா வைரஸை மறந்துவிட்டனர். இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டிருந்தபோது, தமிழ் சிங்கள புதுவருடக் காலத்தில் மீண்டும் கொரோனா வைரஸை அனைவரும் மறந்திருந்தனர் எனவும் தெரிவித்தார்.

டெல்டா வைரஸ் இன்னமும் சமூகத்தில் பரவவில்லை என காண்பிக்க சுகாதார அமைச்சு முயற்சிப்பதாகவும் குற்றஞ்சுமத்திய அவர், நாட்டின் சட்டங்களில் அமலில் இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பதால், மீண்டும் கொரோனா வைரஸ் அலை ஏற்படுவதைத் தடுக்க முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சால் வழங்கப்படும் கொரோனா வைரஸ் தொடர்பான பாதுகாப்பு ஆலோசனைகள் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டியது  அனைத்துத் தரப்பினரதும் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »