Our Feeds


Friday, July 30, 2021

www.shortnews.lk

ஆப்கானில், அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து போரிட்ட ஆப்கானிஸ்தான் இராணுவத்தின் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

 



ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டவர்களில் முதலாவது குழு அங்கிருந்து வெளியேறியுள்ளது.


சுமார் 2500 பேரும் அவர்களது குடும்பத்தினரும் இவ்வாறு வெளியேறி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் அமெரிக்காவின் வொசிங்டன் டிசியில் உள்ள ஃபோர்ட் லீ இராணுவ முகாமில் விசேட வீசா செயன்முறைகளுக்காக தங்க வைக்கப்படவுள்ளனர்.

2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் யுத்தம் ஆரம்பமான போது அமெரிக்காவினால் ஈடுபடுத்தப்பட்ட இராணுவத்துக்கு உதவியளித்தவர்களில் ஒரு பகுதியினரே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.

இதனால் அமெரிக்கப்படையினருக்கு உதவியளித்தவர்களுக்கான அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையிலேயே அவர்களுக்கு அமெரிக்கா புகலிடம் வழங்குகிறது.

2009 ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் சுமார் 70 ஆயிரம் ஆப்கானிஸ்தானியர்கள் அமெரிக்காவில் குடியேறி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »