இலங்கையில் அரச சேவையிலுள்ள மருத்துவ அதிகாரிகள் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதி விசேட வர்த்தமானியை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிழ அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் நேற்று புதன்கிழமை (30) வெளியிட்டுள்ளார்.
இத்திருத்தம் 2021 ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.