Our Feeds


Thursday, July 1, 2021

www.shortnews.lk

சீனாவை யாராவது ஒடுக்க நினைத்தால் அவர்களின் தலை நசுக்கப்படும் - உலக நாடுகளுக்கு சீன ஜனாதிபதி கடும் எச்சரிக்கை

 



எவரேனும் சீனாவை ஒடுக்க நினைத்தால் அல்லது செல்வாக்கு செலுத்த நினைத்தால், அவர்களின் தலை நசுக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி ஸீ ஜிங்பிங் (Xi Jinping) எச்சரிக்கை விடுத்துள்ளார்.


சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஆண்டு விழா பெய்ஜிங் நகரின் Tiananmen சதுக்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு பெய்ஜிங்கில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இதன் போது விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. சுமார் 70,000 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


எவ்வாறாயினும், நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


1921 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது.


நீண்ட உள்நாட்டுப் போருக்குப் பின்னர், கடந்த 72 ஆண்டுகளுக்கு முன் அந்தக் கட்சி ஆட்சியைப் கைப்பற்றியது.


சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டு, 100 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு  ஆவணப்படம் ஒன்றை சீனா உருவாக்கியுள்ளது.


கடந்த 100 ஆண்டுகளில் சீனா அடைந்த வளர்ச்சியையும் அதன் வரலாற்றையும் விபரிக்கும் வகையில் குறித்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.


சுமார் 2,500 நிமிடங்களுக்கு தயாரிக்கப்பட்டுள்ள ‘1921’ எனும் ஆவணப்படத்தை 100 அத்தியாயங்களாக வெளியிட சீனா திட்டமிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »