Our Feeds


Sunday, July 11, 2021

www.shortnews.lk

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விரும்பினால் அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம் - திலும் அமுனுகம அதிரடி

 



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்பினால் அரசாங்கத்திலிருந்து விலகலாம் என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அவர்கள் அவ்வாறு விலகினால் அரசாங்கத்தின் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவு எப்போதும் இருக்கவில்லை, ஜனாதிபதி தேர்தலில் மாத்திரமே எங்களிற்கு அவர்களின் ஆதரவு கிடைத்தது என தெரிவித்துள்ள அமைச்சர் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியையே ஆதரித்தார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.


இதுவே உண்மை கதை என தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த ஆதரவை அங்கீகரித்து மதிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.


பொதுஜனபெரமுன சின்னத்தில் போட்டியிட்டதன் காரணமாகவே அவர்களிற்கு சில ஆசனங்கள் கிடைத்தன என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் இல்லாவிட்டால் அவர்களால் இரண்டு மூன்று ஆசனங்களிற்கு மேல் வென்றிருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.


தனிக்கட்சி என்ற வகையில் அவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம் முடிவெடுக்கலாம், அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்திருக்கலாம் விரும்பினால் வெளியேறலாம் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் அதற்கு தடையேதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.


அந்த கட்சியை சேர்ந்த சிறிய எண்ணிக்கையிலானவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளதால் அவர்கள் வெளியேறினாலும் அது அரசாங்கத்தின் கட்டமைப்பை பாதிக்காது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »