நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாட்டை மீண்டும் அமுல்படுத்துவதா என்பது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் நடைபெறும் கலந்துரையாடல்களில் தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனினும், நாட்டில் தொடர்ந்தும் பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தாது, கொவிட் வைரஸ் பரலவை கட்டுப்படுத்துவதே தமது நோக்கம் என அவர் கூறியுள்ளார்.
கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், எதிர்வரும் 5ம் திகதி வரை நாட்டின் நிலைமையை அவதானித்து, மக்கள் செயற்படக்கூடிய விதம் குறித்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டிருக்கின்ற பின்னணியில், அதன்பின்னரே மேலதிக தீர்மானங்களை எட்ட முடியும் என அவர் கூறுகின்றார்.
எவ்வாறாயினும், நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதா என்பது குறித்து ஐந்தாம் திகதிக்கு பின்னர் நடைபெறும் கலந்துரையாடல்களில் தீர்மானிக்கப்படும் என காதார சேவை பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். (TC)