Our Feeds


Friday, July 2, 2021

www.shortnews.lk

ஷம்பிக ரணவக்கவின் அதிரடி அறிவிப்பு: ராஜபக்ஷக்களுக்கு எதிராக அரசியல் சூராவளி அடிக்கும் - தலைமை தாங்க நாம் தயார்

 



(எம்.மனோசித்ரா)


ராஜபக்க்ஷகளுக்களுக்கு எதிரான காற்று நாட்டில் சகல திசைகளிலிருந்தும் வீசிக் கொண்டிருக்கிறது. அவை வெகு விரைவில் ராஜபக்க்ஷகளுக்கு எதிரான அரசியல் சூறாவளியாக மாற்றமடையும். அதற்கு தலைமை தாங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.


பஷில் ராஜபக்ஷவுக்கு எந்த அமைச்சு பதவியை வழங்கினாலும் அவரால் எதனையும் செய்ய முடியாது என்பது மூன்று மாதங்களிலேயே வெளிப்படும். ராஜபக்க்ஷக்கள் நாட்டுக்கு சாபமாகும் என்றும் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (02)  வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் கொவிட்-19 ஒழிப்பு செயற்பாடுகள் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை முகாமைத்துவம் செய்ய முடியாத ராஜபக்க்ஷக்கள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். இதன் காரணமாக அரசியல் எதிர்ப்பு புயலொன்று அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் உருவாகிக் கொண்டிருக்கிறது.

அன்று மஹிந்த காற்றைப் பற்றி கூறினார்கள். இன்று ராஜபக்ஷக்கள் இனி வேண்டாம் என்று கூறி மக்களின் எதிர்காற்று ஆரம்பமாகியுள்ளது. சகல துறைகளிலும் ராஜபக்க்ஷகளுக்கு வாக்களித்தவர்கள் இன்று அவர்களது செயற்பாடுகளில் அதிருப்தியடைந்து அவர்களுக்கு எதிரான எதிர்ப்புகாற்றுடன் ஒன்றிணைந்துள்ளனர்.

நாட்டில் தொழில்புரியும் பிரஜைகள் 80 இலட்சம் பேர் உள்ளனர். அவர்களில் 14 – 26 இலட்சத்துக்கு இடைப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் உள்ளனர். 40 இலட்சம் பேர் சுயதொழிலில் ஈடுபடுபவர்களாவர். இந்த 40 இலட்சம் மக்களும் இன்று புதிய பாவப்பட்ட ஏழை குழுவினராகியுள்ளனர். இலங்கையின் வறுமை நிலையை 6 வீதம் வரை குறைப்பதற்கு எம்மால் முடிந்தது. ஆனால் முறையற்ற கொவிட் -19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »